அப்பாவின் கொள்கையால் ஊக்கம்: அபிஷேக் பச்சன்

அப்பாவின் கொள்கையால் ஊக்கம்: அபிஷேக் பச்சன்
Updated on
1 min read

செய்யும் தொழிலே தெய்வம் என்கிற தந்தையின் கொள்கைதான் தனக்கும் ஊக்கம் தருவதாக நடிகர் அபிஷேக் பச்சன் கூறியுள்ளார்.

அமிதாப் பச்சன் செய்யும் பணி குறித்து ட்விட்டரில், "செய்யும் தொழிலே தெய்வம். ஆனால், ஒவ்வொரு நாளும் பணியின் நோக்கம் தொடர்ந்து கொண்டே இருக்கும். வேலையே ஆசான். வேலையே விடுதலை. செயலற்றிருப்பது ஒரு சுவரைப் போல. அதைத் தாண்டி வந்து சாதியுங்கள். ஒவ்வொரு எதிர்ப்பையும் எதிர்கொள்ளுங்கள். உங்கள் பணியின் நோக்கத்தை அதனிடத்தில் காட்டுங்கள்" என்று பதிவிட்டிருந்தார்.

இதைப் பகிர்ந்திருந்த மகன் அபிஷேக் பச்சன், "இது தான் ஊக்கம்" என்று குறிப்பிட்டுள்ளார். முன்னதாக ஒரு பேட்டியில், செய்யும் வேலையை வீட்டுக்குள் எடுத்துச் செல்ல தான் விரும்பவில்லை என்று அபிஷேக் பேசியிருந்தார்.

"என்னைப் பொறுத்தவரை, வீட்டுக்குள் என் வேலையை எடுத்துச்செல்ல மாட்டேன். வேலை குறித்த சில விஷயங்கள் வீட்டில் வெளிப்படும். அதைத் தாண்டி வேலை பற்றி வீட்டில் எதுவும் பேசிக்கொள்ள மாட்டேன்" என்று அபிஷேக் பச்சன் கூறியிருந்தார்.

கடைசியாக அமேசான் ப்ரைமில், 'ப்ரீத்: இன் டு தி ஷேடோஸ்' வெப் சீரிஸில் நடித்திருந்த அபிஷேக் பச்சன், 'லூடோ', 'பிக் புல்' ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். இரண்டு படங்களும் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in