அமிதாப் பச்சன் பிறந்த நாள்: திரையுலகினர் வாழ்த்து

அமிதாப் பச்சன் பிறந்த நாள்: திரையுலகினர் வாழ்த்து
Updated on
1 min read

அமிதாப் பச்சன் பிறந்த நாளை முன்னிட்டு திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகிறார்கள்.

இந்தியத் திரையுலகில் மூத்த நடிகராக வலம் வருபவர் அமிதாப் பச்சன். இன்று (அக்டோபர் 11) தனது 78-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். திரையுலகின் மூத்த நடிகர்களுக்கு நெருங்கிய நண்பராக வலம் வருபவர் அமிதாப்.

பத்மஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் மற்றும் இந்திய அரசின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வென்றுள்ளார் அமிதாப் பச்சன். நடிகர், தயாரிப்பாளர், பாடகர், தொகுப்பாளர் எனப் பல்வேறு தளங்களில் தொடர்ச்சியாகப் பணிபுரிந்து வருகிறார்.

அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு, முன்னணித் திரையுலகப் பிரபலங்கள் பலரும் தங்களுடைய சமூக வலைதளத்தில் வாழ்த்துத் தெரிவித்து வருகிறார்கள். இதனால் #HappyBirthdayAmitabhBachchan, #HappyBirthdayBigB ஆகிய ஹேஷ்டேகுகள் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.

சமீபத்தில் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கவுள்ள படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க அமிதாப் பச்சன் ஒப்பந்தமாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in