'எனக்கு மாற்றுத்தொழில் இருக்கிறது என நினைக்கிறேன்'- டாட்டூ போடக் கற்றுக்கொண்ட ஆமிர்கான் மகள்

'எனக்கு மாற்றுத்தொழில் இருக்கிறது என நினைக்கிறேன்'- டாட்டூ போடக் கற்றுக்கொண்ட ஆமிர்கான் மகள்
Updated on
1 min read

நடிகர் ஆமிர்கானின் மகள் ஐரா கான், டாட்டூ போடக் கற்றுக் கொண்டுள்ளார். இதுகுறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

பாலிவுட் பிரபலம் ஆமிர்கானுக்கும், அவரது முதல் மனைவி ரீனா தத்தாவுக்கும் பிறந்தவர் ஐரா கான். இந்தத் தம்பதிக்கு ஜுனைத் என்கிற மகனும் இருக்கிறார். ஐரா கான் கடந்த வருடம், யூரிபெடீஸ் மெடியா என்கிற மேடை நாடகம் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.

வாழ்வில் பல்வேறு புதிய விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற கனவுடன் இருக்கும் ஐரா, தற்போது டாட்டூ (பச்சை குத்துதல்) போடக் கற்றுக் கொண்டுள்ளார்.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் போட்ட முதல் டாட்டூ குறித்துப் பதிவிட்டுள்ள ஐரா, "என் ஐந்தாவது ஆசையும் முடிந்தது. எனது முதல் டாட்டூவைப் போட்டு முடித்திருக்கிறேன். நுபுர் ஷிகாரே என்னை நம்பியதற்கு நன்றி. இதைச் சாத்தியமாக்கிய அயர்ன் பஸ் டாட்டூஸுக்கு நன்றி. சுமாராக இருக்கிறது இல்லையா? எனக்கு மாற்றுத்தொழில் இருக்கிறது என நினைக்கிறேன்" என்று பகிர்ந்துள்ளார்.

தனக்குப் பயிற்சியளித்தவரின் கரங்களில் நங்கூரம் போன்ற படத்தை ஐரா டாட்டூவாக வரைந்துள்ளார். பல ரசிகர்கள் ஐராவின் திறமையைப் பாராட்டி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in