வைரலான சஞ்சய் தத்தின் புதிய புகைப்படம்: ரசிகர்கள் கவலை

வைரலான சஞ்சய் தத்தின் புதிய புகைப்படம்: ரசிகர்கள் கவலை
Updated on
1 min read

நடிகர் சஞ்சய் தத்தின் புதிய புகைப்படம் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. இதில் அவரது தோற்றத்தைப் பார்த்த ரசிகர்கள் அவரது ஆரோக்கியம் குறித்துக் கவலை கொண்டுள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 61 வயதான சஞ்சய் தத்துக்கு நுரையீரல் புற்றுநோய் இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்ட செய்திகள் வந்தன. இதுகுறித்து அவரது குடும்பத்தினர் தெரிவிக்கவில்லை என்றாலும் பாலிவுட் பத்திரிகையாளர் கோமல் நாட்டா இச்செய்தியை ட்விட்டரில் பகிர்ந்து, சஞ்சய் தத் வேகமாக குணம் பெற பிரார்த்தனை செய்வோம் என்று குறிப்பிட்டிருந்தார்.

தொடர்ந்து அவர் மருத்துவ சிகிச்சைக்காக வேலையிலிருந்து தற்காலிக ஓய்வு எடுத்துக்கொள்வதாக அறிவிக்கப்பட்டது. தற்போது அவர் சிகிச்சை எடுத்து வரும் நிலையில் அவரது புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. இதில் சஞ்சய் தத் அதிக பலவீனமாக, மெலிந்து, கன்னங்கள் ஒட்டிப் போய் காணப்படுகிறார்.

இதனால் அவரது ரசிகர்கள், சஞ்சய் தத் மீண்டும் நலம் பெற வேண்டும் என்று நம்பிக்கை தெரிவித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

கடைசியாக சஞ்சய் தத் நடிப்பில் 'சடக் 2' திரைப்படம் ஓடிடியில் வெளியானது. அடுத்தது 'கேஜிஃப் - 2' படத்தில் வில்லனாக சஞ்சய் தத் நடிக்கவிருக்கிறார். மேலும், யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தயாரிப்பான 'ஷம்ஷேரா'விலும் நடிக்கவுள்ளார். இவர் நடிப்பில் 'பூஜ் தி ப்ரைட் ஆஃப் இண்டியா' திரைப்படம் ஓடிடியில் வெளியாகவுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in