உயிரைப் பறித்த டயட் - 27 வயது நடிகை மிஷ்டி முகர்ஜி மரணம்

உயிரைப் பறித்த டயட் - 27 வயது நடிகை மிஷ்டி முகர்ஜி மரணம்
Updated on
1 min read

உலக அளவில் உடல் எடையைக் குறைப்பதற்காகப் பின்பற்றப்படும் டயட்களில் கீட்டோ டயட் முக்கிய இடத்தை வகிக்கிறது. உணவில் மிக மிகக் குறைந்த அளவில் மாவுச்சத்தை எடுத்துக்கொண்டு அதிக அளவில் கொழுப்பையும், அதற்கும் கொஞ்சம் குறைவாகப் புரதத்தையும் எடுத்துக்கொள்வதுதான் கீட்டோ டயட்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறுநீரக கோளாறு காரணமாக நடிகை மிஷ்டி முகர்ஜி பெங்களூருவில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி கடந்த வெள்ளிக்கிழமை (02.10.20) அன்று மிஷ்டி முகர்ஜி மரணமடைந்தார். அவருக்கு வயது 27.

சிறுநீரகம் செயலிழந்ததால் மிஷ்டி முகர்ஜி மரணமடைந்தார் என்று மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டது. இந்நிலையில் கீட்டோ டயட் முறையை தொடர்ந்து பின்பற்றியதாலேயே மிஷ்டி முகர்ஜிக்கு சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டதாக அவரது குடும்பத்தினர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

பல்வேறு திரைப்படங்கள், இசை ஆல்பங்கள் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்திய நடிகை மிஷ்டி முகர்ஜி மறைந்து விட்டார். கீட்டோ டயட் காரணமாக சிறுநீரகம் செயலிழந்ததால் பெங்களூரு மருத்துவமனையில் அவரது உயிர் பிரிந்தது. இது துரதிர்ஷ்டவசமான, மறக்கமுடியாத இழப்பு. அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

‘காஞ்சி: அன்ப்ரேக்கபிள்’, ‘கிரேட் க்ராண்ட் மஸ்தி’, ‘பேகம் ஜான்’, ‘மணிகர்னிகா’ உள்ளிட்ட படங்களில் மிஷ்டி முகர்ஜி நடித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in