சுஷாந்த் சிங் கொலை செய்யப்படவில்லை: எய்ம்ஸ் அறிக்கையில் தகவல்

சுஷாந்த் சிங் கொலை செய்யப்படவில்லை: எய்ம்ஸ் அறிக்கையில் தகவல்
Updated on
1 min read

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் கொலை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை எய்ம்ஸ் மருத்துவமனையின் தடயவியல் துறை, சிபிஐயிடம் ஒப்படைத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் 14-ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சுஷாந்தின் மரணம் குறித்து சட்டரீதியான மருத்துவ அறிக்கைக்காக டாக்டர் சுதீர் குப்தா தலைமையிலான எய்ம்ஸ் தடயவியல் குழு, ஆகஸ்ட் மாதம் சிபிஐன் கோரிக்கைக்குப் பின் அமைக்கப்பட்டது.

இந்த அறிக்கையில் சுஷாந்த் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும், அவரது குடும்பத்தின கூறுவது போல விஷம் கொடுத்த, கழுத்தை நெறித்ததற்கான தடயங்கள் எதுவும் இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதாக எய்ம்ஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சட்டரீதியான விசாரணை நடைபெறுவதால் இந்த அறிக்கை குறித்த விவரங்களை மருத்துவர்கள் பகிர மறுத்துவிட்டனர்.

முன்னதாக நீண்ட நாள் கொஞ்சம் கொஞ்சமாக விஷம் கொடுக்கப்பட்டதற்கான தடயங்களும் இல்லை என இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால் சிபிஐ தரப்போ, மருத்துவக் குழுவோ இதுவரை இந்த அறிக்கை குறித்து பொதுவெளியில் எதுவும் பேசவில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in