திரையரங்குகளிலும் வெளியாகும் லட்சுமி பாம்

திரையரங்குகளிலும் வெளியாகும் லட்சுமி பாம்
Updated on
1 min read

ஓடிடியில் வெளியாகும் தினத்திலேயே, திரையரங்குகளிலும் 'லட்சுமி பாம்' வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2011-ம் ஆண்டு தமிழில் ராகவா லாரன்ஸ் தயாரித்து, இயக்கி, நாயகனாக நடித்த படம் 'காஞ்சனா'. தற்போது இந்தப் படம் 'லட்சுமி பாம்' என்கிற பெயரில் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. அக்‌ஷய் குமார், கியாரா அத்வானி நடிக்க, லாரன்ஸ் இயக்கியுள்ளார்.

கரோனா அச்சுறுத்தலால் இந்தப் படம் நேரடியாக ஓடிடி தளத்தில் நவம்பர் 9-ம் தேதி வெளியாகவுள்ளது. தற்போது டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகும் அதே தினத்தில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது 'லட்சுமி பாம்'.

இது தொடர்பாக 'லட்சுமி பாம்' படத்தில் நடித்திருக்கும் துஷார் கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

"இந்தத் தீபாவளிக்கு 'லட்சுமி பாம்' திரைப்படம் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் ஐக்கிய அரபு அமீரக நாடுகளின் திரையரங்குகளில் நவம்பர் 9-ம் தேதி வெளியாகிறது. இந்தியாவில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் விஐபியில், அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் கனடாவில் ஹாட்ஸ்டார் தளத்தில், நவம்பர் 9 அன்று வெளியாகிறது"

இவ்வாறு துஷார் கபூர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in