பாலியல் குற்றச்சாட்டு வழக்கு: இயக்குநர் அனுராக் காஷ்யப்புக்கு சம்மன்

பாலியல் குற்றச்சாட்டு வழக்கு: இயக்குநர் அனுராக் காஷ்யப்புக்கு சம்மன்
Updated on
1 min read

நடிகை பாயல் கோஷ் அளித்த பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக இயக்குநர் அனுராக் காஷ்யப்புக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. வெர்ஸோவா காவல் நிலையத்தில் அனுராக் காஷ்யப் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இயக்குநர் அனுராக் காஷ்யப் தன்னைப் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கினார் என நடிகை பாயல் கோஷ் குற்றம் சாட்டியுள்ளார். தொடர்ந்து அனுராக் காஷ்யப்புக்கு ஆதரவாக திரைத்துறையினரும் அவரது முன்னாள் மனைவிகளும் குரல் கொடுத்தாலும் பாயல் கோஷ் தனது நிலையில் தீர்மானமாக இருந்து வருகிறார். இதுகுறித்துக் காவல்துறையிலும் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில், வெர்ஸோவா காவல் நிலையம் அனுராக் காஷ்யப்புக்கு சம்மன் அனுப்பியுள்ளது. அதில், ''அக்டோபர் 1 அன்று பாலியல் குற்றச்சாட்டு குறித்த விசாரணைக்கு அனுராக் காஷ்யப் நேரில் வர வேண்டும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, செவ்வாய்க்கிழமை அன்று பாயல் கோஷ் தனக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வேண்டும் என மகாராஷ்டிர ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியைச் சந்தித்துப் பேசினார். இன்று அனுராக் காஷ்யப்புக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. பாயல் கோஷோடு சேர்த்து தனது உயிருக்கும் ஆபத்து இருப்பதால் தனக்கும் ஒய் பிரிவு பாதுகாப்பு வேண்டும் என பாயல் கோஷின் வழக்கறிஞர் கோரியிருப்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in