

வேளாண் மசோதாக்களின் நன்மைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்திருந்தார். பிரதமரின் அந்தப் பதிவுக்கு பதிலளித்து நடிகை கங்கனா ரனாவத் ட்விட்டரில் கூறியிருப்பதாவது:
பிரதமர் அவர்களே, “தூங்குபவர்களை எழுப்பி விடலாம்; தூங்குவது போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது” என்று பழமொழி உண்டு. அதேபோல, ஒரு விஷயத்தை தவறாக புரிந்து கொண்டவர்களுக்கு விளக்கமளிப்பதன் மூலம் அவர்களின் எண்ணத்தை மாற்றிவிட முடியும். ஆனால், அனைத்தும் தெரிந்திருந்தும் வேண்டுமென்றே போராடுபவர்களை நம்மால் மாற்ற முடியாது.
குடியுரிமை திருத்தச் சட்டத்தால் எந்தக் குடிமகனும் வெளியேற்றப்படாத நிலையில், அச்சட்டத்துக்கு எதிராக வன்முறை வெறியாட்டங்களில் தீவிரவாதிகள் ஈடுபட்டனர். அந்த தீவிரவாதிகள்தான் தற்போது வேளாண் மசோதாக்களுக்கு எதிராக போராடி வருகின்றனர். இவ்வாறு அதில் கங்கனா கூறியுள்ளார்.