கரோனாவிலிருந்து குணமடைந்த மலைகா அரோரா

கரோனாவிலிருந்து குணமடைந்த மலைகா அரோரா

Published on

கடந்த சில தினங்களுக்கு முன்பு தனக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், மருத்துவர்கள் அறிவுரையின் படி வீட்டிலேயே தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்வதாகவும் நடிகை மலைகா அரோரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இதற்கு பலரும் மலைகா விரைவில் குணமடைய வேண்டி தங்களுடைய வாழ்த்துகளை தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் தான் கரோனா தொற்றிலிருந்து முற்றிலுமாக குணமடைந்துவிட்டதாக மலைகா அரோரா கூறியுள்ளார். இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:

‘ஒருவழியாக பல நாட்களுக்குப் பிறகு என் அறையை விட்டு வெளியே வந்துவிட்டேன். இதுவே ஒரு பயணம் போல இருக்கிறது. குறைந்த வலியுடன் இந்த வைரஸை கடந்து வந்தது நான் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கவேண்டும்.

எனக்கு வழிகாட்டிய மருத்துவர்களுக்கும், இந்த தனிமை காலத்தை எளிமையானதாக்கிய மும்பை மாநகராட்சிக்கும், நிபந்தனையற்ற ஆதரவை வழங்கிய என்னுடைய குடும்பத்தினருக்கும், நண்பர்கள், உறவினர்கள், ரசிகர்கள் அனைவருக்கும் என்னுடைய மிகப்பெரிய நன்றி. உங்கள் வாழ்த்துச் செய்திகள் தான் எனக்கு வலிமையை வழங்கியது.

இவ்வாறு மலைகா கூறியுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in