சுஷாந்துக்கு நீதி கிடைக்கும் என முழுமையாக நம்புகிறேன்: சுரேஷ் ரெய்னா

சுஷாந்துக்கு நீதி கிடைக்கும் என முழுமையாக நம்புகிறேன்: சுரேஷ் ரெய்னா
Updated on
1 min read

மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் குறித்து சுரேஷ் ரெய்னா காணொலி ஒன்றைப் பேசிப் பகிர்ந்துள்ளார்.

மும்பையில் கடந்த ஜூன் 14-ம் தேதி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார் சுஷாந்த். இவரது மரணத்தைச் சுற்றிப் பல மர்மங்கள் நிலவுவதால், அதுகுறித்த விசாரணையை சிபிஐ தற்போது மும்முரமாக மேற்கொண்டு வருகிறது. சுஷாந்த் மறைந்த நாளிலிருந்தே அவரைப் பற்றிய நினைவுகளைப் பலர் உணர்ச்சிகரமாகப் பகிர்ந்து வருகின்றனர்.

கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவும் சுஷாந்த் பற்றிப் பகிர்ந்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் காணொலி ஒன்றைப் பகிர்ந்துள்ள ரெய்னா, சுஷாந்துக்கு நீதி கிடைக்க அரசு எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ளும் என்பதைத் தான் நம்புவதாகக் கூறியுள்ளார்.

"சகோதரா! நீங்கள் என்றுமே எங்கள் மனங்களில் உயிர்ப்புடன் இருப்பீர்கள். உங்கள் ரசிகர்கள் உங்கள் இழப்பை அதிகமாக உணர்கிறார்கள். உங்களுக்கு நீதி கிடைக்க நம் அரசும், தலைவர்களும் எல்லா முயற்சிகளையும் செய்வார்கள் என நான் முழுமையாக நம்புகிறேன். நீங்கள் உண்மையான ஊக்கம் தருபவர்" என்று ரெய்னா பேசியுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி, மகேந்திர சிங் தோனி சர்வதேசக் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த சில நிமிடங்களில் ரெய்னாவும் தனது ஓய்வை அறிவித்தார். 18 டெஸ்ட் போட்டிகள், 226 ஒரு நாள் போட்டிகள், 78 டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடியிருக்கும் ரெய்னா, தற்போது செப்டம்பர் 19 அன்று ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கவுள்ள ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடவுள்ளார்.

- Suresh Raina

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in