சுஷாந்த் சிங் பற்றிய வெப் சீரிஸா? - அமேசான் ப்ரைம் விளக்கம்

சுஷாந்த் சிங் பற்றிய வெப் சீரிஸா? - அமேசான் ப்ரைம் விளக்கம்
Updated on
1 min read

மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் பற்றிய எந்த ஒரு படைப்பையும் தாங்கள் தயாரிக்கவில்லை என அமேசான் ப்ரைம் தளம் தெரிவித்துள்ளது.

முன்னதாக அமேசான் ப்ரைம், பாகிஸ்தான் நடிகர் ஹஸன் கான் நாயகனாக நடிக்க, சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட ஒரு வெப் சீரிஸை தயாரிப்பதாகச் செய்திகள் வந்தன. இதற்கு முக்கியக் காரணம் ஹஸனின் (சரிபார்க்கப்படாத) இன்ஸ்டாகிராம் கணக்கிலிருந்து இடப்பட்ட பதிவே.

அதில், "என் மனதுக்கு நெருக்கமான ஒரு படைப்பில் நடிக்கவுள்ளேன். இந்திய வெப் சீரிஸ் ஒன்றில் சுஷாந்த் சிங் ராஜ்புத் கதாபாத்திரத்தில் நடிக்கிறேன்" என்ற அந்தப் பதிவுடன் ஹஸன் - சுஷாந்தின் புகைப்படம் பகிரப்பட்டிருந்தது.

இப்போது இது குறித்து தெளிவுபடுத்தியுள்ள ப்ரைம் தரப்பு, ஹஸனை தாங்கள் எதற்காகவுமே ஒப்பந்தம் செய்யவில்லை என்று கூறியுள்ளது.

"அமேசான் ப்ரைம் வீடியோ, மறைந்த சுஷாந்த் சிங் ராஜ்புத் பற்றிய எந்த ஒரு வெப் சீரிஸையும் ஆரம்பிக்கவோ, அதற்கான அனுமதியோ தரவில்லை. ஹஸன் கான் உட்பட எந்த நடிகரோடும் அப்படியொரு திட்டம் இல்லை" என்று அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் 14-ம் தேதி மும்பையில் தனது இல்லத்தில் தற்கொலை செய்து கொண்டார் சுஷாந்த் சிங் ராஜ்புத். இந்த மரணம் குறித்து புதன் கிழமை அன்று உச்ச நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in