அசாம் வெள்ளம்: நடிகர் அக்ஷய் குமார் ரூ.1 கோடி நிதியுதவி

அசாம் வெள்ளம்: நடிகர் அக்ஷய் குமார் ரூ.1 கோடி நிதியுதவி
Updated on
1 min read

தொடர் கனமழை மற்றும் வெள்ளப் பெருக்கால் அசாம் மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை வெள்ளத்தில் சிக்கி 112 பேர், நிலச்சரிவில் 26 பேர் என மொத்தம் 138 பேர் இறந்துள்ளனர். இந்நிலையில் அசாம் வெள்ள நிவாரணப் பணிகளுக்கு பிரபல பாலிவுட் நடிகர் அக் ஷய் குமார் ரூ.1 கோடி நன்கொடை அளித்துள்ளார். அவருக்கு முதல்வர் சர்வானந்த சோனோவால் நன்றி தெரிவித்துள்ளார்.

முதல்வர் வெளியிட்டுள்ள செய்தியில் “அக் ஷய் குமார் எப்போதும் அசாம் மக்களின் உண்மையான நண்பராக இருந்து வருகிறார். அவரது உதவி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அசாமின் உண்மையான நண்பராக, உலக அரங்கில் அவரது புகழ் பரவ, கடவுள் அவருக்கு எல்லா ஆசிர்வாதங்களையும் பொழிவார்” என்று கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு அசாம் வெள்ள நிவாரணப் பணிகளுக்கு அக் ஷய் குமார் ரூ.2 கோடி நன்கொடை வழங்கியதாக அம்மாநில அரசு கூறியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in