

தங்கள் குடும்பத்தில் புதிய நபரை எதிர்பார்ப்பதாக பாலிவுட் தம்பதி சைஃப் அலி கானும் - கரீனா கபூரும் அறிவித்துள்ளனர்.
2012-ஆம் ஆண்டு அக்டோபர் 16-ஆம் தேதி சைஃபும் கரீனாவும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2016-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தைமூர் என்ற மகன் பிறந்தார். தற்போது இரண்டாவது குழந்தையை தாங்கள் எதிர்பார்ப்பதாக இருவரும் அறிவித்துள்ளனர்.
"எங்கள் குடும்பத்தில் கூடுதலாக ஒரு நபரை எதிர்பார்க்கிறோம் என்பதை அறிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி. எங்கள் நல விரும்பிகளின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி - சைஃப் மற்றும் கரீனா" என்று இருவரின் அலுவலகத்திலிருந்து வந்திருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. புதன்கிழமை மதியம் இந்த அறிக்கை வெளியானது.
சைஃப் அலி கானின் முதல் மனைவி அம்ரிதா சிங். இந்தத் தம்பதியினருக்கு சாரா அலி கான் என்ற மகள் இருக்கிறார். இவரும் தற்போது பாலிவுட்டில் நாயகியாக வலம் வருகிறார். புதன்கிழமை அன்று சாரா அலி கானின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.