சில காலம் திரையுலகிலிருந்து விலகுகிறேன்: சஞ்சய் தத் அறிவிப்பு

சில காலம் திரையுலகிலிருந்து விலகுகிறேன்: சஞ்சய் தத் அறிவிப்பு
Updated on
1 min read

சில காலம் திரையுலகிலிருந்து விலகுவதாக சஞ்சய் தத் அறிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 9-ம் தேதி சஞ்சய் தத்துக்கு கடும் மூச்சுத் திணறல் மற்றும் லேசான நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் பூரண நலம்பெற வேண்டி திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்து வந்தார்கள்.

ஐசியூவில் அனுமதிக்கப்பட்டு இருந்த சஞ்சய் தத், உடல்நலம் சீராகி நேற்று (ஆகஸ்ட் 10) வீடு திரும்பினார். அவர் வீட்டிற்குள் செல்லும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகின. அவரை மருத்துவர்கள் தொடர் ஓய்வில் இருக்கச் சொல்லி இருக்கிறார்கள்.

அவருடைய உடல்நிலையில் உள்ள பிரச்சினை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியானாலும், அதிகாரபூர்வமாக எதுவுமே உறுதிப்படுத்தப்படவில்லை. இதனிடையே திடீரென்று தனது மருத்துவ காரணங்களுக்காகத் திரையுலகிலிருந்து சில காலம் விலகுவதாக சஞ்சய் தத் அறிவித்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பதிவில் அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

"நண்பர்களே, மருத்துவ ரீதியிலான காரணங்களுக்காக நான் என் பணியிலிருந்து சிறிய ஓய்வை எடுத்துக்கொள்கிறேன். என் குடும்பத்தினரும், நண்பர்களும் என்னுடன் இருக்கின்றனர். எனது நலவிரும்பிகள் யாரும் கவலைப்படவோ, தேவையின்றி எதுவும் யூகிக்கவோ வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். உங்கள் அன்பு மற்றும் நல் வாழ்த்துகளோடு நான் விரைவில் மீண்டும் திரும்பி வருவேன்"

இவ்வாறு சஞ்சய் தத் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in