நடிகர் சுஷாந்த் சிங் மர்ம மரணம்: அந்நிய செலாவணி சட்டத்தில் அமலாக்கத் துறை வழக்கு பதிவு

நடிகர் சுஷாந்த் சிங் மர்ம மரணம்: அந்நிய செலாவணி சட்டத்தில் அமலாக்கத் துறை வழக்கு பதிவு

Published on

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மர்ம மரணம் தொடர்பாக தற்போது அமலாக்கத் துறை அந்நியச் செலாவணி வழக்கை பதிவு செய்துள்ளது.

பிஹார் போலீஸ் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் இந்த வழக்கை அமலாக்கத் துறை பதிவு செய்துள்ளது. சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தந்தை, தனது மகன் வங்கிக் கணக்கில் நடிகை ரியா சக்ரவர்த்தி மற்றும்சிலர் பரிவர்த்தனை மேற்கொண்டதாக புகார் தெரிவித்திருந்தார்.

சுஷாந்தின் வருமானத்தை எவரேனும் அந்நியச் செலாவணி மோசடிக்கு பயன்படுத்தி சட்ட விரோதமாக சொத்து வாங்கியுள்ளனரா என்பது குறித்து விசாரிக்கும் என்று அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்தவகையில் ரியா சக்ரவர்த்தி மற்றும்சிலருக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பும் என்று தெரிகிறது.

தற்கொலை என்று கூறப்படுவதால், உள்ளூர் போலீசார் விசாரிப்பதற்கும் அமலாக்கத் துறை விசாரிப்பதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. குற்றவியல்சட்டத்தின்படி ஒருவர் மீதான குற்றம் நிரூபிக்கப்படும் வரை அவர் நிரபராதி என்று கருதப்படுவார். ஆனால் அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் தீர்ப்பு வரும்வரை சம்பந்தப்பட்ட நபர் குற்றவாளியாகவே கருதப்படுவார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in