நடனக் கலைஞர்களுக்கு டைகர் ஷெராஃப் உதவி

நடனக் கலைஞர்களுக்கு டைகர் ஷெராஃப் உதவி
Updated on
1 min read

சுமார் 100 நடனக் கலைஞர்களுக்கு ஒரு மாதத்துக்குத் தேவையான ரேஷன் பொருட்கள் அனுப்பி வைத்து உதவிச் செய்துள்ளார் டைகர் ஷெராஃப்

இந்தியா முழுக்கவே கரோனா அச்சுறுத்தலால் வெள்ளித்திரை, சின்னத்திரை படப்பிடிப்பு எதுவுமே நடைபெறவில்லை. திரையுலக பிரபலங்கள் அனைவருமே வீட்டிலேயே இருக்கிறார்கள். சமூக வலைதளம் மூலமாக கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்

கரோனா அச்சுறுத்தல் தொடங்கி சுமார் 100 நாட்களைத் தாண்டிவிட்டது. இந்தச் சமயத்தில் வெள்ளித்திரை, சின்னத்திரை படப்பிடிப்பு எதுவுமே இல்லாததால் தினசரி தொழிலாளர்கள், உதவி இயக்குநர்கள் உள்ளிட்ட திரையுலக சம்பந்தப்பட்டவர்கள் பலரும் வருமானமின்றி தவித்தனர். அனைத்து திரையுலகிலிருந்து முன்னணி நடிகர்கள் பலரும் உதவிகள் செய்யத் தொடங்கினார்கள்.

இந்தி திரையுலகில் சல்மான் கான் முதல் நபராக களமிறங்கி உதவிகள் செய்யத் தொடங்கினார். அவரைத் தொடர்ந்து அக்‌ஷய் குமார், ஷாரூக் கான் உள்ளிட்ட பலர் பல்வேறு வழிகளில் உதவிகள் செய்து வருகிறார்கள். சில நாட்களுக்கு முன்பு மிகவும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள 100 நடனக் கலைஞர்களின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தினார் ஹ்ரித்திக் ரோஷன்

தற்போது, நடனக் கலைஞர்கள் சுமார் 100 பேருக்கு ரேஷன் பொருட்கள் அனுப்பி வைத்து உதவிச் செய்துள்ளார் டைகர் ஷெராஃப். இந்த ரேஷன் பொருட்கள் அனைத்துமே ஒரு மாதத்துக்கு வரும் அளவுக்குப் பெரிய பேக் என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த உதவியால் டைகர் ஷெராஃப்புக்கு நடனக் கலைஞர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in