மருத்துவமனையில் அனுபம் ஷ்யாம்: உதவி கோரும் குடும்பத்தினர்

மருத்துவமனையில் அனுபம் ஷ்யாம்: உதவி கோரும் குடும்பத்தினர்
Updated on
1 min read

கிட்னி பிரச்சினையால் அவதியுற்று வந்த அனுபம் ஷ்யாம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு உதவுமாறு குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

‘லஜ்ஜா’, ‘நாயக்’, ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் அனுபம் ஷ்யாம். இது தவிர பல்வேறு தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார். இதில் ‘மன் கீ அவாஸ் ப்ரதிக்யா’ என்ற தொடரில் அவரது கதாபாத்திரம் மிகவும் பேசப்பட்டது.

கடந்த சில மாதங்களாக கிட்னி பிரச்சினையால் அவதிப்பட்டு வந்துள்ளார் அனுபம். இதனால் மும்பையில் உள்ள மருத்துவமனையில் தொடர்ந்து டயாலிஸிஸ் சிகிச்சை பெற்று வந்துள்ளார். சமீபத்தில் அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததால் மும்பையில் வேறு ஒரு தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அவரது குடும்பத்தினர் இந்தி திரையுலகைச் சேர்ந்த அவரது நண்பர்களிடம் உதவி கோரியுள்ளதாக அவரது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறும்போது, ''தற்போது பணப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. சிலரிடம் நாங்கள் பேசி வருகிறோம். அனுபம் ஷ்யாம் நிலை பற்றி அவரது நண்பர்கள் சிலரிடம் கூறியுள்ளோம். நடிகர் மனோஜ் பாஜ்பாய் எங்களுக்கு போன் செய்து எங்களுக்கு ஆறுதல் கூறியுள்ளார்'' என்றனர்.

தற்போது சில பாலிவுட் பிரபலங்கள் அனுபமுக்கு உதவி செய்ய முன்வந்துள்ளனர். இது தொடர்பாக தங்களுடைய சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டுள்ளனர். என்ன உதவி செய்தார்கள் என்பது விரைவில் தெரியவரும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in