எனக்கு வழங்கப்படும் சிறப்புச் சலுகை குற்ற உணர்ச்சியை ஏற்படுத்துகிறது: ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் வெளிப்படை

எனக்கு வழங்கப்படும் சிறப்புச் சலுகை குற்ற உணர்ச்சியை ஏற்படுத்துகிறது: ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் வெளிப்படை
Updated on
1 min read

தர்மா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘குஞ்சன் சக்ஸேனா: தி கார்கில் கேர்ள்’. இப்படம் இந்திய விமானப்படையின் முதல் பெண் விமான ஓட்டியான குஞ்சன் சக்ஸேனாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் குஞ்சன் சக்ஸேனா கதாபாத்திரத்தில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடித்துள்ளார். இப்படத்துக்காக ஜான்வி கபூர் குஞ்சன் சக்ஸேனாவுடன் சில நாட்களைச் செலவழித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இப்படம் ஆக்ஸ்ட் 12 ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது.

இப்படம் குறித்து ஜான்வி கபூர் கூறியுள்ளதாவது:

''உங்களுடைய வேலையில் நீங்கள் கடின உழைப்பையும், விடாமுயற்சியையும் மேற்கொண்டால் அனைத்துமே கைகூடி வரும். குஞ்சன் சக்ஸேனாவுடைய விவரணை மிகவும் எளிமையானது. ஒருவர் தொடர்ந்து கடினமாக உழைத்தால் அவருக்குக் கிடைக்க வேண்டியது கிடைத்தே தீரும்.

எனக்குக் கிடைக்கும் சிறப்புச் சலுகை பற்றி நான் அறிவேன். அது எனக்கு அடிக்கடி குற்ற உணர்ச்சியை ஏற்படுத்துகிறது. ஆனாலும், நான் இன்னும் சிறப்பாகச் செய்யவேண்டியது என்னவென்றால் இன்னும் கடினமாக உழைப்பதன் மூலம் எனக்காக இடத்தைத் தக்கவைத்துக் கொள்வதுதான்''.

இவ்வாறு ஜான்வி கபூர் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in