உட்புறங்களில் படப்பிடிப்பு ஆரம்பிப்பதும் ஆபத்துதான்: சேகர் கபூர் 

உட்புறங்களில் படப்பிடிப்பு ஆரம்பிப்பதும் ஆபத்துதான்: சேகர் கபூர் 
Updated on
1 min read

இந்த கரோனா நெருக்கடி சமயத்தில் படப்பிடிப்பையோ, டப்பிங் பணிகளையோ, நெருக்கடியான உட்புறங்களில் நடத்துவதும் கூட ஆபத்துதான் என இயக்குநர் சேகர் கபூர் கூறியுள்ளார்.

அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் பச்சன், ஆராத்யா பச்சன் ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட செய்தியைத் தொடர்ந்து சேகர் கபூர் ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"நமக்குப் பிடித்த நட்சத்திரங்கள் சீக்கிரம் குணமடைய வேண்டும் நாம் பிரார்த்தனை செய்யும் அதே நேரத்தில், தங்களுக்கு கோவிட்-19 அறிகுறிகள் இருக்கின்றன என்பதை வெளிப்படையாகச் சொன்ன அவர்கள் தைரியத்தைப் பாராட்டுவோம். எவ்வளவு பேர் சொல்லாமலேயே இருக்கிறார்கள்?

இப்படிப் பரவும் கிருமியால், இட நெருக்கடி இருக்கும் உட்புறங்களில் படப்பிடிப்பையோ டப்பிங் பணிகளையோ துவங்குவது கூட ஆபத்தானது என்பது நிரூபணமாகியுள்ளது. தொற்று பரவும் முக்கிய இடங்களாக ஸ்டூடியோக்கள் மாறிவிடும்"

இவ்வாறு சேகர் கபூர் கூறியுள்ளார்.

சில நாட்களுக்கு முன், 'ப்ரீத் இண்டூ தி ஷேடோஸ்' வெப் சீரிஸுக்கான டப்பிங் பணிகளை முடிக்க அபிஷேக் பச்சன் ஒரு ஸ்டூடியோவுக்குச் சென்று வந்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in