அமிதாப், அபிஷேக் கரோனாவிலிருந்து விரைவில் மீள ஜான் சீனா வாழ்த்து

அமிதாப், அபிஷேக் கரோனாவிலிருந்து விரைவில் மீள ஜான் சீனா வாழ்த்து
Updated on
1 min read

இந்தியத் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அமிதாப் பச்சனுக்கு கரோனா தொற்று உறுதியானது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவரைத் தொடர்ந்து மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய், பேத்தி ஆராத்யா ஆகியோருக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அமிதாப் பச்சன் - அபிஷேக் பச்சன் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஐஸ்வர்யா ராய் - ஆராத்யா இருவரும் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டனர்.

அமிதாப் பச்சன் மற்றும் அவரது குடும்பத்தினருக்குக் கரோனா தொற்று உறுதியானவுடன், அரசியல் கட்சிப் பிரபலங்கள், முன்னணி நடிகர்கள், தொழில்துறை பிரபலங்கள் எனப் பலரும் அமிதாப் பச்சன் குடும்பத்தினர் பூரண நலம்பெற வாழ்த்து தெரிவித்தார்கள்.

இந்நிலையில் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன் இருவரும் கரோனாவிலிருந்து விரைவில் மீண்டு வர வாழ்த்து தெரிவிக்கும் வகையும் பிரபல WWE மல்யுத்த வீரர் ஜான் சீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர்கள் இருவரது புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

இதற்கு பாலிவுட் ரசிகர்கள் பலரும் ஜான் சீனாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

இதே போல சுஷாந்த் சிங் ராஜ்புத், ரிஷி கபூர், இர்ஃபான் கான் ஆகியோரின் மறைவின் போதும் அவர்களின் புகைப்படங்களை ஜான் சீனா பகிர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in