இந்தி நடிகை திவ்யா சவுக்சே புற்றுநோயால் உயிரிழப்பு

இந்தி நடிகை திவ்யா சவுக்சே புற்றுநோயால் உயிரிழப்பு
Updated on
1 min read

மத்திய பிரதேச மாநிலம் போபாலைச் சேர்ந்தவர் நடிகை திவ்யா சவுக்சே (28). நடிகையான பின்னர் மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் திவ்யா சவுக்சே வசித்து வந்தார். இவர் நடித்த முதல் திரைப்படம் ஹை அப்னா தில் தோ ஆவாரா கடந்த 2016-ம்ஆண்டில் வெளிவந்தது. நடிகை, மாடல், டி.வி. சீரியல் நடிகை, பாடகி, பாடலாசிரியர் என பன்முகம் கொண்டவர் திவ்யா.

இந்நிலையில் அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். இதற்காக அவர் போபால் சென்று சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று காலை அவர் போபாலில் உயிரிழந்தார்.

மரணத்துக்கு முன்னதாக தனதுஇன்ஸ்டாகிராம் பக்கத்தில், “நான் மரணப் படுக்கையில் இருக்கிறேன் என்ற உண்மையை சொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது. நான் தைரியமாக இருக்கிறேன். தயவு செய்து எந்த கேள்வியும் கேட்காதீர்கள். உங்களை எனக்கு எவ்வளவு பிடிக்கும் என்பது கடவுளுக்கு மட்டுமே தெரியும். என் மரணம் எளிதாக இருக்க பிரார்த்தனை செய்யுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.-பிடிஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in