சாலை மற்றும் ரவுண்டானாவுக்கு சுஷாந்த் பெயர்: சொந்த மாவட்ட மக்களின் கோரிக்கை ஏற்பு

சாலை மற்றும் ரவுண்டானாவுக்கு சுஷாந்த் பெயர்: சொந்த மாவட்ட மக்களின் கோரிக்கை ஏற்பு
Updated on
1 min read

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் அவரது இல்லத்தில் கடந்த ஜூன் மாதம் 14-ம் தேதி அன்று தற்கொலை செய்து கொண்டார். இவரது மரணம் பாலிவுட் உலகத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

வாரிசு நடிகர்களாலும், வாரிசு நடிகர்களை ஊக்குவிக்கும் இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் கொடுத்த மன உளைச்சலால்தான் சுஷாந்த் தற்கொலை செய்துகொண்டார் என்று பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் சுஷாந்த் பிறந்த பிஹார் மாநிலத்தின் புர்னியா மாவட்டத்தில் உள்ள ஒரு சாலை மற்றும் ஒரு ரவுண்டானாவுக்கு சுஷாந்த் பெயரைச் சூட்டுமாறு புர்னியா மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதனை ஏற்றுக்கொண்ட புர்னியா மேயர் சவிதா தேவி, மதுபானியிலிருந்து மட்டா சவுக் செல்லும் சாலைக்கு சுஷாந்த் சிங் ராஜ்புத் சாலை என்று பெயர் மாற்றப்பட்டுள்ளதாக அறிவித்தார். அதுமட்டுமின்றி அங்குள்ள ஃபோர்ட் கம்பெனி ரவுண்டானாவுக்கு சுஷாந்த் சிங் ரவுண்டானா என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in