கார் விபத்தில் சிக்கிய நடிகர் கோவிந்தா மகன்

மகன், மகளுடன் கோவிந்தா | கோப்புப் படம்
மகன், மகளுடன் கோவிந்தா | கோப்புப் படம்
Updated on
1 min read

பிரபல பாலிவுட் நடிகர் கோவிந்தாவின் மகன் யாஷ்வர்தன் அஹூஜா புதன்கிழமை இரவு ஜூஹூ பகுதியில் கார் விபத்தில் சிக்கினார்.

இரவு 8.30 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது. தனது ஓட்டுநருடன் யாஷ்வர்தன் காரில் பயணித்திருக்கிறார். இன்னொரு காருடன் இவர்களின் கார் மோதியுள்ளது. ஆனால் யாருக்கும் பெரிய காயங்கள் ஏற்படவில்லை.

இதுகுறித்து செய்தித் தளம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள கோவிந்தா, "எனது மகன் யாஷ்வர்தன் காரை ஓட்டி வந்தார். திடீரென முன்னால் ஒரு கார் வந்து இவரது காரை மோதிவிட்டது. ஆனால் எனது மகன் பாதுகாப்பாக உள்ளார். கையில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. கவலையளிக்கும்படி எதுவும் இல்லை. காரில் சில கீறல்கள் விழுந்துள்ளன" என்று கூறியுள்ளார்.

சம்பவம் நடந்த இடத்துக்கு உடனடியாக விரைந்துள்ள கோவிந்தா கார் மோதல் குறித்துப் பேசியுள்ளார். அந்த இன்னொரு கார் யாஷ் ராஜுடையது என்றும், இந்த விஷயம் சுமுகமாகப் பேசித் தீர்க்கப்பட்டது என்றும், இரு தரப்பிலிருந்தும் காவல்துறையிடம் புகார் அளிக்கப்படவில்லை என்றும் கோவிந்தா கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in