இசையமைப்பாளர்கள் பரஸ்பரம் தங்கள் மெட்டுகளை மீண்டும் உருவாக்கும் புதிய நிகழ்ச்சி

இசையமைப்பாளர்கள் பரஸ்பரம் தங்கள் மெட்டுகளை மீண்டும் உருவாக்கும் புதிய நிகழ்ச்சி
Updated on
1 min read

புதிய ரியாலிட்டி நிகழ்ச்சி ஒன்றில் முக்கிய பாலிவுட் இசையமைப்பாளர்கள் 20 பேர் பல்வேறு அணிகளாகப் பிரிந்து, பரஸ்பரம் தங்களின் பிரபலமான பாடல் மெட்டுகளை மாற்றிக் கொண்டு புதிதாக உருவாக்கவுள்ளனர்.

'டைம்ஸ் ஆஃப் மியூஸிக்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சியில் பப்பி லஹரி, ராஜேஷ் ரோஷன், ப்யாரிலால், ஆனந்த்ஜி, யூஃபோரியா, விஜு ஷா உள்ளிட்ட மூத்த இசைக் கலைஞர்கள் இடம் பெறுகின்றனர்.

விஷால் தத்லானி தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி 11 பகுதிகள் அடங்கியது. இதில் விஷால் சேகர் - பப்பி லஹரி, சலீம் சுலைமான் - ப்யாரிலால், சச்சின் சிகார் - யுஃபோரியா, ஷாந்தனு மொய்த்ரா - அமால் மாலிக், அமித் த்ரிவேதி - அக்னீ, விஜு ஷா - மிதுன், ராஜேஷ் ரோஷன் - ஹிமேஷ் ரேஷமைய்யா, அஜய் அதுல் - ஆனந்த்ஜி, இண்டியன் ஓஷன் - ஸ்னேஹா கன்வால்கர் என 9 அணிகள் உள்ளன.

உதாரணத்துக்கு, விஷால் மற்றும் சேகர் இசையமைத்த ஒரு பிரபலமான பாடலை பப்பி லஹரி புதிதாக தன் பாணியில் உருவாக்குவார். அதேபோல அவர்களும். இப்படி ஒவ்வொரு இணையும் பரஸ்பரம் பிரபலமான பாடல்களைப் புதிதாக உருவாக்கவுள்ளன. மொத்தம் 22 பாடல்கள் இந்த நிகழ்ச்சியில் இடம்பெறவுள்ளன. எம்எக்ஸ் ப்ளேயர் ஸ்ட்ரீமிங் தளத்தில் இந்த நிகழ்ச்சி வெளியாகும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in