ராமர் கோயில் குறித்த படத்தை இயக்கும் கங்கணா

ராமர் கோயில் குறித்த படத்தை இயக்கும் கங்கணா
Updated on
1 min read

கங்கணா ரனாவத் நடிப்பில் 2019ஆம் ஆண்டு வெளியான படம் ‘மணிகர்னிகா: தி குயின் ஆஃப் ஜான்சி’. சுதந்திர போராட்ட வீரர் ராணி லட்சுமி பாயின் கதையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட இப்படத்தை கங்கணாவே இயக்கியிருந்தார். இப்படம் நல்ல வரவேறபை பெற்றது. அதன்பிறகு இயக்கத்தில் கவனம் செலுத்தாமல் இருந்தார் கங்கணா.

இந்நிலையில் ராமர் கோயில் வழக்கை அடிப்படையாகக் கொண்டு உருவாகவுள்ள ‘அபரஜிதா அயோத்யா’ என்ற படத்தை கங்கணா இயக்குவது உறுதியாகியுள்ளது.

இது குறித்து கங்கணா கூறியிருப்பதாவது:

முதலில் இப்படத்தை இயக்குவது குறித்து எந்த திட்டமும் இல்லை. முதலில் கதையளவில் மட்டுமே நான் கவனம் செலுத்திக் கொண்டிருந்தேன். நான் அதை தயாரித்து வேறு ஒருவரை வைத்து இயக்கவேண்டும் என்று விரும்பினேன். நாம் மிகவும் பிஸியாக இருந்ததால் என்னால் இயக்குவது குறித்து யோசிக்க கூட முடியவில்லை.

எனினும் கே.வி. விஜயேந்திர பிரசாத் என்னிடம் பகிர்ந்த ஒரு கதை இதற்கு முன் நான் இயக்கிய ஒரு வரலாற்று படத்தின் கதையை ஒத்திருந்தது. என்னுடைய நண்பர்களும் இப்படத்தை நானே இயக்கவேண்டும் என்று விரும்புகின்றனர். எனக்கும் நான் இப்படத்தை இயக்குவதே சிறந்தது என்று தோன்றியது. எனவே இவை இயல்பாக நடந்துவிட்டது.

இப்படத்தை நானே தயாரிக்கிறேன். ஆனால் இதில் நான் நடிக்கவில்லை. முழுக்க முழுக்க ஒரு இயக்குநராக மட்டுமே இப்படத்தில் கவனம் செலுத்த விரும்புகிறேன்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in