மறைந்த வாஜித் கானுக்கு கரோனா தொற்று இருந்தது: சகோதரர் தகவல்

புகைப்படத்தில் வலது புறம் இருப்பவர் வாஜித் கான்.
புகைப்படத்தில் வலது புறம் இருப்பவர் வாஜித் கான்.
Updated on
1 min read

மறைந்த வாஜித் கானுக்கு கரோனா தொற்று இருந்ததாக அவரது சகோதரர் தெரிவித்துள்ளார்.

பாடகர், இசையமைப்பாளர் வாஜித் கான் கரோனா தொற்று காரணமாக காலமானார். 42 வயதான வாஜித் கானுக்கு ஏற்கனவே சிறுநீரகப் பிரச்சினைகள் இருந்தன.

வாஜித் கானுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது. ஆனால், அவர் மாரடைப்பின் காரணமாக மரணமடைந்தார் என அவரது சகோதரர் சாஜித், பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.

செம்பூர், சுரானா மருத்துவமனையில் வாஜித் கான் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு சில மாதங்களுக்கு முன்னால் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தது. சமீபத்தில் அவருக்கு சிறுநீரகத் தொற்று ஏற்பட்டது. இதுவே அவர் ஆரோக்கியம் மோசமாக மாறுவதற்கான தொடக்கமாக இருந்தது. கடந்த நான்கு நாட்களாக வென்டிலேட்டர் உதவியுடன் சுவாசித்து வந்தார். இதயம், சிறுநீரகம் பாதிக்கப்பட்ட நிலையில், கரோனா தொற்றும் இருந்ததால் அவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகக் குறைவாக இருந்தது. இதனால் தொடர்ந்து அவரது நிலைமை மோசமாகியுள்ளது.

கடந்த 1998 ஆம் வருடம் சல்மான் கான் நடிப்பில் 'ப்யார் கியா தோ தர்னா க்யா' படத்தின் மூலம் சாஜித்-வாஜித் இணை பாலிவுட்டின் இசையமைப்பாளர்களாக அறிமுகமாயினர். தொடர்ந்து 'கர்வ்', 'தேரே நாம்', 'பார்ட்னர்', 'வாண்டட்', 'தபாங்' (வரிசை) என பல்வேறு சல்மான் கான் படங்களில் பணியாற்றினர். வாஜித் பல்வேறு சூப்பர் ஹிட் பாடல்களையும் பாடியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in