பிரபல இசையமைப்பாளர் வாஜித் கான் உடல்நலக் குறைவால் காலமானார்

பிரபல இசையமைப்பாளர் வாஜித் கான் உடல்நலக் குறைவால் காலமானார்
Updated on
1 min read

பிரபல இசையமைப்பாளர் வாஜித் கான் மரணமடைந்தார். அவருக்கு வயது 42.

பாலிவுட்டின் பிரபல இசையமைப்பாளர்கள் சாஜித்-வாஜித். பிரபல தபேலா கலைஞரான உஸ்தாத் ஷராஃபத் அலிகானின் மகன்களான இவர்கள் ‘தபாங்’ , ‘ஏக் தா டைகர்’, ‘வான்டட்’ உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ளனர்.

1998ஆம் ஆண்டு சல்மான்கான் நடித்த ‘பியார் கியா தோ தர்ணா க்யா’ படத்தின் மூலம் பாலிவுட்டில் இசையமைப்பாளர்களாக அறிமுகமான சாஜித்- வாஜித் சகோதரர்கள் அதன்பிறகு சல்மான்கானின் ஆஸ்தான இசையமைப்பாளர்களாக விளங்கினர். சமீபத்தில் வெளியான ‘ப்யார் கரோனா’ ‘பாய் பாய்’ ஆகிய சல்மான்கானின் இரு ஆல்பங்களுக்கு இசையமைத்திருந்தனர்.

இந்நிலையில் சாஜித்- வாஜித் சகோதரர்களில் ஒருவரான வாஜித் கான் இன்று (ஜூன் 1) உடல்நலக் குறைவால் காலமானார்.

வாஜித் கானின் மரணச் செய்தியை இசையமைப்பாளர் சலீம் மெர்சண்ட் உறுதி செய்துள்ளார். இது குறித்து அவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடன் கூறியதாவது:

வாஜித் கானுக்கு பல்வேறு உடல்நலப் பிரச்சினைகள் இருந்தன சிறுநீரகப் பிரச்சினையால் அவர் அவதிப்பட்ட வந்த அவருக்கு கடந்த சில நாட்களுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. ஆனால் சமீபத்தில் மீண்டும் சிறுநீரகத்தில் அவருக்கு பிரச்சினை இருந்தது தெரியவந்தது. கடந்த நான்கு நாட்களாக உடல்நிலை மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். வெண்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று அவரது உயிர் பிரிந்தது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

வாஜித் கானின் மறைவுக்கு பாலிவுட் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in