விவாகரத்து கோரும் நவாசுதீன் மனைவி

விவாகரத்து கோரும் நவாசுதீன் மனைவி
Updated on
1 min read

பாலிவுட்டின் பிரபல நடிகராக இருப்பவர் நவாசுதீன் சித்திக். ‘கேங்ஸ் ஆஃப் வாஸிப்பூர்’, ‘ராமன் ராகவ் 2.0’, ‘ரயீஸ்’, ‘போட்டோகிராஃப்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.

இந்நிலையில் நவாசுதீனிடமிருந்து அவரது மனைவி ஆலியா விவாகரத்து கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக அவரது மனைவியின் வழக்கறிஞர் அபய் சஹாய் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது;

''விவாகரத்துக்கான காரணம் குறித்து என்னால் வெளிப்படையாகச் சொல்ல இயலாது. ஆனால், ஆலியா கூறியிருக்கும் குற்றச்சாட்டுகள் மிகவும் தீவிரமானவையாக இருப்பதால், அதை வெளியே சொன்னால் நவாசுதீன் மற்றும் அவரது குடும்பத்தின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படும்.

விவாகரத்து நோட்டீஸ் நவாசுதீனின் வாட்ஸ் அப் மற்றும் இ மெயிலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை அவர் அதுகுறித்துப் பதிலளிக்கவில்லை''.

இவ்வாறு அபய் சஹாய் கூறியுள்ளார்.

நவாசுதீனுக்கும் ஆலியாவுக்கும் கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in