ஊரடங்கு விதிகளை மீறியதாக நடிகை பூனம் பாண்டே மீது வழக்குப்பதிவு

ஊரடங்கு விதிகளை மீறியதாக நடிகை பூனம் பாண்டே மீது வழக்குப்பதிவு
Updated on
1 min read

ஊரடங்கு விதிகளை மீறியதாக மாடலும் நடிகையுமான பூனம் பாண்டே மீது மும்பை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்தியாவில் கரோனா அச்சுறுத்தல் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. ஆனால், மே 17-ம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கிறது. இந்த ஊரடங்கில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது மத்திய அரசு.

இதை மீறுபவர்கள் பலரின் மீது வழக்குப்பதிவு செய்து வருகிறது காவல்துறை. தற்போது காரணமின்றி மும்பையில் உள்ள மரைன் ட்ரைவ் பகுதியில் காரில் சுற்றியதற்காக பூனம் பாண்டே மீது வழக்குப் பதிவு செய்துள்ளது மும்பை காவல்துறை.

இது தொடர்பாக மும்பை காவல்துறை ஆய்வாளர் ம்ருத்யஞ்சய் ஹிரேமத் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

"பாண்டே மற்றும் சாம் அஹமத் பாம்பே இருவர் மீதும் ஐபிசி பிரிவு 269 (உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய நோய் தொற்றைப் பரப்பக்கூடிய வகையில் அலட்சியமாக நடந்து கொண்டது) மற்றும் 188-ன் (அரசு பிரகடனம் செய்துள்ள உத்தரவை மீறுதல்) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது"

இவ்வாறு மும்பை காவல்துறை ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in