உங்கள் வாழ்க்கையின் தேடல் நான் - தன் அம்மாவுக்காக கங்கணா எழுதிய கவிதை

உங்கள் வாழ்க்கையின் தேடல் நான் - தன் அம்மாவுக்காக கங்கணா எழுதிய கவிதை
Updated on
1 min read

இன்று உலகம் முழுவதும் அன்னையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் சமூக வலைதளங்களில் தொடர்ந்து இயங்கிவரும் பாலிவுட் நடிகை கங்கணா ரனாவத் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது அம்மாவுக்காக கவிதை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அந்த கவிதையில் கூறப்பட்டிருப்பதாவது:

அம்மா

உங்கள் வாழ்க்கையின் தேடல் நான்
உங்கள் இளம் இதயத்தில் முதன்முதலாக நான் உதித்த போது..
உங்கள் கண்கள் நம்பிக்கையில் ஒளிர்ந்தன
ஒற்றை செல்லாக நான் உங்கள் கருவறைக்கு வந்தபோது
எனக்கு உயிர் கொடுக்க நீங்கள் சுவாசித்தீர்கள்
எனக்கு குருதி கொடுக்க நீங்கள் சாப்பிட்டீர்கள்
பிறகு என்னை உங்களிடமிருந்து பிரித்து எடுத்து
இந்த பரந்த உலகை எனக்கு பரிசளித்தீர்கள்
உங்களின் ஒரு பகுதியான நான்
உங்களிடமிருந்து வெளியே வந்து
உங்களை தேடிக் கொண்டிருக்கிறேன்
உலகம் முழுக்க பயணித்தேன்
ஆனாலும் எங்கும் உங்கள் கருவறையின்
அன்பும் கதகதப்பும் எனக்கு கிடைக்கவில்லை
பிறகு என்னுடைய இதயத்திடம் சென்றேன்
அங்கு உங்களை கண்டுகொண்டேன் அம்மா
நீங்கள் அங்குதான் இருக்கிறீர்கள்
வாழ்வுக்கான ஒரு ஆசையாகவும்
ஒரு தேடலாகவும்
நீங்கள் என் இதயத்தில் உதித்தீர்கள்
உங்கள் வாழ்க்கையின் தேடல் நான்

இவ்வாறு அந்த கவிதையில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in