இணையத்தில் ரிஷி கபூர் குறித்த தேடல் 7000 சதவீதம் அதிகரிப்பு

இணையத்தில் ரிஷி கபூர் குறித்த தேடல் 7000 சதவீதம் அதிகரிப்பு
Updated on
1 min read

இரத்தப் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த பாலிவுட் மூத்த நடிகர் ரிஷி கபூர், அதற்கான தொடர் சிகிச்சையில் இருந்தார். கடந்த ஏப்ரல் 29 அன்று இரவு, உடல்நலக் குறைபாட்டால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஏப்ரல் 30 அன்று காலை சிகிச்சை பலனின்றி ரிஷி கபூர் உயிரிழந்தார். அவருக்கு வயது 67.

ரிஷி கபூரின் மறைவு பாலிவுட் உலகை மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்கள் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தியது. ரிஷி கபூர் மறைவுக்கு சமூக வலைதளங்களில் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

இந்நிலையில் ரிஷி கபூரின் மறைவுக்குப் பிறகு இணையத்தில் அவர் குறித்த தேடல் 7000 சதவீதம் அதிகரித்துள்ளது.

எஸ்இஎம்ரஷ் என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில் கடந்த ஏப்ரல் 30 அன்று ட்விட்டர் சமூக வலைதளத்தில் ரிஷி கபூரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த அவரது ரசிகர்கள் #rishikapoor, #rishi_kapoor, #riprishikapoor, #riprishikapoorji, #riplegend உள்ளிட்ட பல ஹாஷ்டேகுகளை பயன்படுத்தி மொத்தம் 14,394 ட்வீட்களை செய்திருப்பது தெரியவந்துள்ளது.

இது குறித்து எஸ்இஎம்ரஷ் நிறுவனத்தின் தொலைதொடர்பு பிரிவு தலைவர் ஃபெர்னாண்டோ ஆங்குலோ கூறியுள்ளதாவது:

ரிஷி கபூரின் மறைவு ஒட்டு மொத்த இந்திய திரைத்துறைக்கும் நம்பமுடியாத இழப்பு. பக்கத்து வீட்டு நபர் போன்ற சிரிப்பை எப்போதும் கொண்ட அவர் நிச்சயம் மிஸ் செய்யப்படுவார். அவரது திரைப்படங்கள் மூலம் எதிர்கால தலைமுறைகளை அவர் தொடர்ந்து மகிழ்விப்பார்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in