நான் நலமுடன் இருக்கிறேன்: உடல்நலம் குறித்த வதந்திகளுக்கு நசிருதீன் ஷா முற்றுப்புள்ளி

நான் நலமுடன் இருக்கிறேன்: உடல்நலம் குறித்த வதந்திகளுக்கு நசிருதீன் ஷா முற்றுப்புள்ளி
Updated on
1 min read

பாலிவுட்டின் மூத்த நடிகர் நசிருதீன் ஷா, தொலைக்காட்சி, சினிமா, வெப்சீரிஸ் என்று இன்றளவும் ஓடிக்கொண்டிருப்பவர். 1967-ஆம் ஆண்டு தனது திரையுலகப் பயணத்தைத் தொடங்கிய அவர் இதுவரை நூறுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் நேற்று நசிருதீன் ஷா உடல்நிலை கடுமையாகப் பாதிப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் ஒரு தகவல் வேகமாகப் பரவி வந்தது. இது அவரது ரசிகர்கள் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

இந்த சூழலில் இந்த தகவல் உண்மைக்கு புறம்பானது என்று நசிருதீன் ஷா தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ஃபேஸ்புக் பதிவில் ‘என்னுடைய உடல்நலன் குறித்து விசாரித்த அனைவருக்கும் நன்றி. நான் ஊரடங்கை கடைபிடித்து நலமுடன் வீட்டில் இருக்கிறேன் என்பதை அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். தயவு செய்து வதந்திகளை நம்ப வேண்டாம்’ என்று கூறியுள்ளார்.

மேலும் நசிருதீன் ஷாவின் மகன் விவான் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

அப்பா நலமுடன் இருக்கிறார். அவரது உடல்நலம் குறித்து வரும் செய்திகள் போலியானவை. அவர் நலமுடன் இர்ஃபான் பாய் மற்றும் சிந்து ஜி (ரிஷி கபூர்) ஆகியோருக்காக பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறார். அவர்களது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். நம் அனைவருக்கும் இது மிகப்பெரிய இழப்பு.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in