நம்ப முடியவில்லை: ரிஷி கபூர் மறைவுக்கு ரஜினி- கமல் இரங்கல்

நம்ப முடியவில்லை: ரிஷி கபூர் மறைவுக்கு ரஜினி- கமல் இரங்கல்
Updated on
1 min read

ரிஷி கபூரின் மறைவுக்கு ரஜினி மற்றும் கமல் தங்களுடைய இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில வருடங்களாகவே புற்று நோய்க்கு எதிராக சிகிச்சை எடுத்து வந்தார் ரிஷி கபூர். நேற்று (ஏப்ரல் 29) அவரது உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்தார்.

இன்று (ஏப்ரல் 30) காலை 8:45 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவரது உயர் பிரிந்தது. ரிஷி கபூருக்கு வயது 67. இவர் பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரின் தந்தை ஆவார்.இவரது மறைவு இந்தியத் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரிஷி கபூரின் மறைவு குறித்து ரஜினி மற்றும் கமல் வெளியிட்டுள்ள இரங்கல் ட்வீட்டில் கூறியிருப்பதாவது:

ரஜினி: மனமுடைந்துவிட்டேன்... ஆன்மா சாந்தியடையட்டும்.. என் அன்பு நண்பர் ரிஷி கபூர்

கமல்: நம்ப முடியவில்லை சின்டூஜி (திரு ரிஷிகபூர்) எப்போதும் தயாராக ஒரு புன்னகையை வைத்திருப்பார். எங்கள் இருவருக்கும் பரஸ்பரம் அன்பும், மரியாதையும் இருந்தது. நீங்கள் இல்லாத குறையை உணர்வேன் நண்பா. அவர் குடும்பத்துக்கு என் மனமார்ந்த அனுதாபங்கள்

இவ்வாறு ரஜினி மற்றும் கமல் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in