பிரபல பாலிவுட் நடிகர் ரிஷி கபூர் மரணம்

பிரபல பாலிவுட் நடிகர் ரிஷி கபூர் மரணம்
Updated on
1 min read

பிரபல பாலிவுட் மூத்த நடிகர் ரிஷி கபூர் மும்பை மருத்துவ மனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.அவருக்கு வயது 67.

கடந்த சில வருடங்களாக புற்று நோய்க்கு எதிராக சிகிச்சை எடுத்து வந்த நிலையில் தற்போது ரிஷி கபூர் மரணமடைந்திருக்கிறார்.

ரிஷி கபூரின் உடல் நிலை நேற்று மோசமடைந்ததை தொடர்ந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்தார்.

இதுகுறித்து அவரது அண்ணன் ரன்தீர் கபூர் கூறும்போது, “ புற்று நோயால் அவதிப்பட்டு வந்த ரிஷி கபூர் சுவாசிப்பத்தில் ஏற்பட்ட சிரமம் காரணமாக மருத்துவ சேர்க்கப்பட்டிருந்தார்”என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் ரிஷி கபூர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டதாக அவர் குடும்பத்தார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாபி, சாந்தினி போன்ற திரைப்படங்கள் மூலம் பாலிவுட்டின் நட்சத்திர நடிகராக உயர்ந்தவர் ரிஷி கபூர். மேலும் பன்முக கதாபாத்திரங்களை ஏற்று நடித்து அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்த்தவர்.

ரிஷி கபூர் இறப்புக்கு அமிதாப் பச்சன் உள்ளிட்ட மூத்த பாலிவுட் நடிகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளர்னர்.

மறைந்த ரிஷி கபூர் பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரின் தந்தை ஆவார்.

பாலிவுட் நடிகர் இர்பான் கான் புதன்கிழமை இறந்த நிலையில் மீண்டும் ஒரு பாலிவுட் நடிகரின் இறப்பு திரையுலகை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in