கண்டிப்பாக உங்களது இழப்பை உணர்வேன்: குஷ்பு புகழாஞ்சலி

கண்டிப்பாக உங்களது இழப்பை உணர்வேன்: குஷ்பு புகழாஞ்சலி
Updated on
1 min read

கண்டிப்பாக உங்களது இழப்பை உணர்வேன் என்று இர்ஃபான் கான் மறைவு குறித்து குஷ்பு தெரிவித்துள்ளார்.

சில வருடங்களுக்கு முன்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டார் பாலிவுட் நடிகர் இர்ஃபான் கான். அதற்குப் பிறகும் மீண்டும் சில படங்களில் நடித்தார். இதனிடையே நேற்று (ஏப்ரல் 28) அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால், அவரை மும்பையில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர்.

இதனிடையே, இன்று (ஏப்ரல் 29) காலை சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. இர்ஃபான் கான் மறைவுக்கு ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகினரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

தற்போது குஷ்பு வெளியிட்டுள்ள இரங்கல் ட்வீட்டில் கூறியிருப்பதாவது:

"இர்ஃபான் கானின் துரதிர்ஷ்டவசமான மரணம் பற்றிக் கேள்விப்பட்டு மனமுடைந்து போனேன். மிகச் சிறப்பான நடிகர். ஒவ்வொரு போராட்டத்தையும் புன்னகையுடன் எதிர்கொண்டவர். உண்மையில் அவர் ஒரு முழுமையான நடிகர். ஒரு மாவீரர். இந்த இழப்பைத் தாங்கும் வலிமை அவரது குடும்பத்துக்குக் கிடைக்கட்டும். உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும் இர்ஃபான்.

சிலரை நீங்கள் சந்தித்ததே இல்லையென்றாலும் அவர்கள் உங்களில் ஒருவராக மாறிவிடுவார்கள். உங்கள் வாழ்வில் ஒவ்வொரு நாளும் அவர்களின் இருப்பை உணர முடியும். உங்கள் ஒவ்வொரு உணர்ச்சியிலும் உங்களோடு பயணப்படுவார்கள். இர்ஃபான் அப்படி ஒரு நபர். கண்டிப்பாக உங்களது இழப்பை உணர்வேன்".

இவ்வாறு குஷ்பு தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in