பாலிவுட்டில் பாடுவதற்கு சம்பளம் கிடைப்பதில்லை: நேஹா கக்கார்

பாலிவுட்டில் பாடுவதற்கு சம்பளம் கிடைப்பதில்லை: நேஹா கக்கார்
Updated on
1 min read

பாலிவுட்டில் பாடகர்களுக்குச் சரியாகச் சம்பளம் கிடைப்பதில்லை என பாடகி நேஹா கக்கார் கூறியுள்ளார்.

ஆன்க் மாரே, காலா சஷ்மா, திலார் என பாலிவுட்டின் பல சூப்பர் ஹிட் பாடல்களைப் பாடியவர் நேஹா கக்கர். தற்போது இருக்கும் பிரபலமான பாடகர்களில் ஒருவர். சமீபத்தில் ஐஏஎன்எஸ் செய்திப் பிரிவுக்குப் பேட்டி கொடுத்துள்ள நேஹா, "பாலிவுட்டில் பாடுவதற்கு எங்களுக்குச் சம்பளமே தருவதில்லை. ஒரு சூப்பர் ஹிட் பாடலைப் பாடிவிட்டால் அந்தப் பாடகர் இசை நிகழ்ச்சிகள் மூலமாகப் பணம் சம்பாதித்துவிடுவார் என்று நினைக்கிறார்கள்.

இசை நிகழ்ச்சிகளின் மூலம் எனக்கு நல்ல வருமானம் வருகிறது. சரிதான். ஆனால், பாலிவுட்டில் எங்களைப் பாட வைப்பார்கள். ஆனால் சம்பளம் தர மாட்டார்கள்" என்று கூறியுள்ளார்.

அடுத்ததாக நேஹா, யோ யோ ஹனி சிங்குடன் சேர்ந்து மாஸ்கோ சுகா என்ற பாடலில் தோன்றவுள்ளார். இது பஞ்சாபி மற்றும் ரஷ்ய மொழியின் கலவைப் பாடலாக இருக்கும். ரஷ்ய மொழி வரிகளை எகாடெரீனா ஸிஸோவா என்பவர் பாடியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in