கரோனா தொற்று எனது அப்பாவைப் பார்த்துப் பயப்பட வேண்டும்: ஹ்ரித்திக் ரோஷன் பெருமிதம்

கரோனா தொற்று எனது அப்பாவைப் பார்த்துப் பயப்பட வேண்டும்: ஹ்ரித்திக் ரோஷன் பெருமிதம்
Updated on
1 min read

நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் தனது தந்தை ராகேஷ் ரோஷன் உடற்பயிற்சி செய்யும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.

71 வயதான ராகேஷ் ரோஷன் பாலிவுட்டின் பிரபல இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர்.இவர்தான் மகன் ஹ்ரித்திக் ரோஷனை தனது இயக்கத்தில் நாயகனாக அறிமுகம் செய்தவர். ஹ்ரித்திக்கின் பல சூப்பர் ஹிட் படங்களுக்கும் இவரே இயக்குநர், தயாரிப்பாளர்.

இவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை ஹ்ரித்திக் ரோஷன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். "அடடா. அதுதான் என் தந்தை. எப்போதும் விடாமுயற்சி. இதுபோன்ற நேரங்களில் நமக்கு இதுபோன்ற தீர்மானமும், உறுதியும்தான் தேவை. இந்த வருடம் இவருக்கு 71 வயது ஆகப்போகிறது.

தினமும் 2 மணிநேரம் உடற்பயிற்சி செய்கிறார். ஓ, கடந்த வருடம் கேன்சரையும் வென்றிருக்கிறார். (கரோனா) வைரஸ் இவரைப் பார்த்துப் பயப்பட வேண்டும் என நினைக்கிறேன். அதிகம் பயப்பட வேண்டும்" என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து கரோனா குறித்த விழிப்புணர்வைத் தனது ரசிகர்களுக்கு ஹ்ரித்திக் ரோஷன் ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in