காலை உடைத்துக் கொள்ளச் சிறந்த நேரம்: ட்விங்கிள் கன்னா 

காலை உடைத்துக் கொள்ளச் சிறந்த நேரம்: ட்விங்கிள் கன்னா 
Updated on
1 min read

நடிகை ட்விங்கிள் கன்னா தனது காலை உடைத்துக்கொண்டதைப் பற்றி நகைச்சுவையாகப் பதிவிட்டுள்ளார்.

நடிகர் அக்‌ஷய்குமாரின் மனைவி நடிகை ட்விங்கிள் கன்னா தொடர்ந்து சமூக வலைதளங்களில் தீவிரமாக இயங்கி வருபவர். இவரது எழுத்துக்கென தனி ரசிகர் கூட்டத்தையும் கொண்டுள்ளார். குறிப்பாக இவரது நகைச்சுவை, நையாண்டிப் பதிவுகள் இணையத்தில் பிரபலம்.

சமீபத்தில் தனது காலை உடைத்துக் கொண்டுள்ளார் ட்விங்கிள் கன்னா. ஞாயிற்றுக்கிழமை அன்று இவரை அக்‌ஷய்குமார் காரில் மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றதை வீடியோவாகப் பகிர்ந்த கன்னா, அக்‌ஷய்குமாரை, சாந்தினி சௌக் பகுதியிலிருந்து வந்திருக்கும் எனது டிரைவர் என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டிருந்தார்.

திங்களன்று கட்டுப் போடப்பட்டுள்ள தனது காலை புகைப்படம் எடுத்துப் பகிர்ந்துள்ள கன்னா, "கரன் கபாடியாவிடமிருந்து (குடும்ப நண்பர்) அறிவுரை பெற்ற என் குழந்தைகள், எனது காலில் போடப்பட்டிருக்கும் கட்டின் மேலேயே டிக் டாக் டோ விளையாடியிருக்கிறார்கள். இதில் நல்ல விஷயம், இதை விடக் காலை உடைத்துக் கொள்ளச் சிறந்த நேரம் இல்லை ஏனென்றால் எப்படியும் நான் எங்கும் சென்றிருக்க மாட்டேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in