

'தடம்' படத்தின் இந்தி ரீமேக்கில் பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா நடிக்கிறார்.
அருண் விஜய் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 'தடம்' திரைப்படம் தமிழில் வெளியானது.
ஓர் உரு இரட்டையர்களை மையமாகக் கொண்டு உருவான த்ரில்லர் பின்னணி கதைக்களம் தமிழ் ரசிகர்களை ஈர்த்தது. இதனால் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்நிலையில் இப்படத்தின் இந்தி ரீமேக்கில் பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா நடிக்க உள்ளார் என்று இன்று (புதன்கிழமை) அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இன்னும் பெயரிடப்படாத இப்படம் நவம்பர் 20 ஆம் தேதி திரைக்கு வரும் வெளிவரும் என்றும் படப்பிடிப்பு மே மாதம் தொடங்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை முரத் கேதானி, பூஷன் குமார் ஆகியோர் தயாரிக்கின்றனர்.