

40 ஆண்டுகளாக தன்னிடம் பணிபுரியும் ஒப்பனைக் கலைஞர் ஒரு நாள் கூட பணிக்கு வராமல் இருந்ததில்லை என்று அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார்.
1972ஆம் ஆண்டு ராஸ்தே கா பத்தார் என்கிற திரைப்படத்தில் அமிதாப் பச்சனுக்கு ஒப்பனைக் கலைஞராக பணிபுரிய ஆரம்பித்தவர் தீபக். தீபக்கின் அழகு நிலையத்தின் 40வது ஆண்டு விழாவில் கலந்துகொண்ட அமிதாப், தீபக் பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.
தீபக் குறித்து அமிதாப் பச்சன் தனது ட்விட்டர் பதிவில் "தீபக் 47 வருடங்களாக எனது ஒப்பனைக் கலைஞராக இருப்பவர். தனது சம்பாத்தியத்தின் மூலம் மராத்தி, போஜ்புரி படங்களைத் தயாரித்தார். மனைவிக்காக ஒரு அறையில் அழகு நிலையம் ஆரம்பித்தார்.
இன்று அந்த அழகு நிலையம் ஆரம்பித்து 40 வருடங்கள் ஆகின்றன. மூன்று மாடி கட்டிடத்தில் 40 பணியாளர்களுடன் இயங்குகிறது. ஆனால் (தீபக்) எனது ஒப்பனைக்காக ஒரு நாளும் வராமல் இருந்ததில்லை" என்று தெரிவித்துள்ளார் அமிதாப் பச்சன்