3-வது திருமணம் தொடர்பான கிண்டல்: நேஹா பெண்ட்ஸே காட்டம்

3-வது திருமணம் தொடர்பான கிண்டல்: நேஹா பெண்ட்ஸே காட்டம்
Updated on
1 min read

தன்னை மூன்றாவது தாரமாகத் திருமணம் செய்து கொண்டவரைப் பற்றிய கிண்டல்களுக்குப் பதிலளித்துள்ளார் நடிகை நேஹா பெண்ட்ஸே.

'இனிது இனிது காதல் இனிது', 'மெளனம் பேசியதே’ போன்ற தமிழ்ப் படங்களில் நடித்தவர் நேஹா. மராத்தி மற்றும் இந்தியில் பல படங்களில் நடித்துள்ளார். இந்தி பிக் பாஸின் போட்டியாளராகவும் கலந்து கொண்டார். இவர் ஷர்துல் பயஸ் என்பவரை சில வாரங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். ஷர்துல் ஏற்கெனவே இரண்டு முறை திருமணமாகி விவாகரத்தானவர், அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன என்ற விவரத்தையும் நேஹா ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து இணையத்தில் நேஹாவையும், ஷர்துலையும் கிண்டல் செய்து நிறைய பேர் கருத்து பகிர ஆரம்பித்தனர். தற்போது இந்த கிண்டல்களுக்குப் பதிலளித்துள்ளார் நேஹா.

"இது என்ன பெரிய விஷயமா? இன்று பலரும் பல்வேறு காரணங்களுக்காகத் தாமதமாகத் திருமணம் செய்து கொள்கின்றனர். திருமணத்துக்கு முன் பல்வேறு உறவுகளில் இருக்கின்றனர். அதில் அர்ப்பணிப்பு, காதல், உடல்ரீதியாக நெருக்கமாக இருப்பது என அனைத்தும் திருமணத்தில் இருப்பதைப் போலவே இருக்கும்.

ஒரே வித்தியாசம் அதில் திருமணம் என்ற சட்ட ரீதியான முத்திரை இருக்காது. அதனால் ஏன் ஷர்துல் விவாகரத்தானவர் என்பதைப் பற்றி பலர் பேசுகின்றனர்? அவர் நேர்மறை எண்ணங்கள் நிறைந்தவர். அவரது கடந்த கால வாழ்க்கை பற்றி எதுவும் என்னிடம் மறைத்ததில்லை. நானும் திருமணத்துக்கு முன்பு உறவிலிருந்தவள் தான்" என்று நேஹா பேசியுள்ளார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in