’ஹங்காமா’ இரண்டாம் பாகம் எடுக்கும் ப்ரியதர்ஷன்

’ஹங்காமா’ இரண்டாம் பாகம் எடுக்கும் ப்ரியதர்ஷன்
Updated on
1 min read

2003-ல் வெளியாகி வெற்றி பெற்ற தனது ’ஹங்காமா’ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கிறார் இயக்குநர் ப்ரியதர்ஷன். இதில் பரேஷ் ராவல், ஷில்பா ஷெட்டி, ப்ரணிதா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

மலையாளத் திரைக் கதாசிரியர் ப்ரியதர்ஷன் 1984 ஆம் ஆண்டு ’பூச்சுக்கொரு மூக்குத்தி’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். மோகன்லால் நாயகனாக நடித்த இந்த நகைச்சுவைப் படம் மாபெரும் வெற்றி பெற்றது. தொடர்ந்து மலையாளத்தில் பல வெற்றிப் படங்களைத் தந்தவர் ப்ரியதர்ஷன். மோகன்லாலுடன் இணைந்து இவர் பணியாற்றிய பல படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றன.

தொடர்ந்து 1992 ஆம் ஆண்டு பாலிவுட்டில் களமிறங்கிய ப்ரியதர்ஷன் தன் இயக்கத்திலும், மற்றவர்கள் இயக்கத்திலும் வெளியாகி வெற்றி பெற்ற பல மலையாளப் படங்களை ரீமேக் செய்ய ஆரம்பித்து அதில் வெற்றியும் கண்டார். இதில் 2003 ஆம் ஆண்டு, தனது இயக்கத்தில் முதல் படமான ’பூச்சுக்கொரு மூக்குத்தி’யை ’ஹங்காமா’ என்ற பெயரில் பாலிவுட்டில் ரீமேக் செய்து அது வெற்றியும் பெற்றது.

ஆனால், கடந்த சில வருடங்களாக ப்ரியதர்ஷனின் எந்தத் திரைப்படமும் சரியான வரவேற்பைப் பெறாத நிலையில் 6 வருடங்கள் கழித்து மீண்டும் இந்தியில் திரைப்படம் இயக்குகிறார். இந்தத் திரைப்படம் 'ஹங்காமா' படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

படத்தின் முதல் போஸ்டரை ஷில்பா ஷெட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். "அனைவருக்கும் விருப்பமான நகைச்சுவைப் பொழுதுபோக்கு படத்தின் ரீமேக்கில் நடிப்பது மகிழ்ச்சி. என்னைத் திரையுலகுக்கு அறிமுகம் செய்த ரத்தன் அவர்களுடன் மீண்டும் பணியாற்றுவதிலும், முதல் முறையாக ப்ரியதர்ஷன் அவர்களுடன் பணியாற்றுவதில் மகிழ்ச்சி" என்று ஷில்பா ஷெட்டி குறிப்பிட்டுள்ளார்.

'ஹங்காமா 2', அடுத்த வருடம் ஆகஸ்டு 14 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in