

இந்தியாவின் ஆஸ்கர் பரிந்துரைத் திரைப்படமாக அனுப்பப்பட்ட கல்லி பாய் திரைப்படம் இறுதிப் பட்டியலில் இடம்பெற முடியாமல் வெளியேறியது.
ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் சிறந்த அந்நிய மொழித் திரைப்படம் என்ற ஒரே பிரிவில் மட்டுமே மட்டுமே மற்ற நாடுகளின் திரைப்படங்களுக்கு விருது வழங்கப்படுகிறது. இந்த ஒரு விருதுக்கு சர்வதேச அளவில் கடும் போட்டி நிலவும். ஒவ்வொரு நாடும் அதன் பரிந்துரையாக ஒரு படத்தை அனுப்பும். அதிலிருந்து இறுதிப் பட்டியலில் 10 படங்கள் இடம்பெற்று அதில் ஒரு படத்துக்கு விருது வழங்கப்படும்.
இந்தியாவின் பரிந்துரையாக ஸோயா அக்தர் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடித்த 'கல்லி பாய்' திரைப்படம் அனுப்பப்பட்டது. தற்போது இறுதிப் பட்டியலில் இடம் பெற முடியாமல் 'கல்லி பாய்' வெளியேறியுள்ளது. கடைசியாக ஆமிர் கானின் 'லகான்' திரைப்படம் 2001-ல் இறுதிப் பட்டியலில் இடம்பெற்றது. அதற்கு முன் 1958ல் 'மதர் இண்டியா', 1989 'சலாம் பாம்பே' ஆகிய படங்கள் இறுதிப் பட்டியலில் இடம்பெற்றன.
'பாரசைட்' - தென் கொரியா, 'பெய்ன் அண்ட் க்ளோரி'- ஸ்பானிஷ், 'தி பெய்ண்டட் பேர்ட்' - செக் குடியரசு, 'ட்ரூத் அண்ட் ஜஸ்டிஸ்' - எஸ்டோனியா, 'லீ மிஸரபிள்ஸ்' - ஃபிரான்ஸ், 'தோஸ் வூ ரிமைண்ட்' - ஹங்கேரி, 'ஹனிலேண்ட் - வடக்கு மாசிடோனியா, கோர்பஸ் க்றிஸ்டி - போலந்து, பீன்போல் - ரஷ்யா, அட்லாண்டிகா - செனகல் ஆகிய படங்கள் இறுதிப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.