ஹைதராபாத் கால்நடை மருத்துவர் கொலை வழக்கு: வருண் தவான் உள்ளிட்ட பாலிவுட் நட்சத்திரங்கள் கண்டனம்

ஹைதராபாத் கால்நடை மருத்துவர் கொலை வழக்கு: வருண் தவான் உள்ளிட்ட பாலிவுட் நட்சத்திரங்கள் கண்டனம்
Updated on
1 min read

ஹைதராபாத் கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி கொலை குறித்து பாலிவுட் நடிகர்க ள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தெலங்கானா மாநிலம் மகபூப் நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரியங்கா (26). ஹைதராபாத் மாதப்பூர் கால்நடை அரசு மருத்துவ மனையில் மருத்துவராக பணி யாற்றி வந்தார். இந்நிலையில், கடந்த புதன்கிழமை வழக்கம்போல் பணிக்கு சென்ற பிரியங்கா, இரவு தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது, வழியில் அவரது இருசக்கர வாகனத்தின் டயர் ‘பஞ்சர்' ஆகியுள்ளது. இதையடுத்து, தனது தங்கையை செல்போனில் தொடர்பு கொண்டு பிரியங்கா பேசியிருக் கிறார். அப்போது அவர், தனக்கு உதவி செய்ய சில லாரி டிரைவர்கள் வந்துள்ளனர் என்றும், அவர்களை பார்க்க பயமாக இருப்பதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து, வாடகை காரை பிடித்து வீட்டுக்கு வருமாறு பிரியங்காவிடம் அவரது தங்கை கூறியுள்ளார். ஆனால், இரவு வெகுநேரமாகியும் பிரியங்கா வீடு திரும்பவில்லை. அவரது செல் போனும் அணைத்து வைக்கப் பட்டிருந்தது.

இதனால் அச்சமடைந்த அவரது குடும்பத்தினர், இரவு 11 மணியளவில் மாதப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்

இந்நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை, ரங்காரெட்டி மாவட்டம் சட்டான்பல்லி பாலத்துக்கு கீழே, எரிந்த நிலையில் பிரியங்கா சடலமாக கிடந்துள்ளார். இதை யடுத்து, அங்கு சென்ற போலீஸார் அவரது உடலைக் கைப்பற்றினர்.

இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கால் நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டியின் மரணத்துக்கு சமூக வலைதளங்களில் நடிகர்கள் பலரும் தங்கள் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.

அவற்றின் விவரம்

வருண் தவான்

தற்போது தேவைப்படுவது அப்பெண்ணுக்கும், அவரது குடும்பத்திற்கு நீதி கிடைப்பதை உறுதி செய்வது மட்டுமே

அனில் கபூர்:

எப்போது இந்திய மகள்களுக்கு நீது கிடைக்கும்? எப்போது அவர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள்.

ரிச்சா சந்தா


அந்த பெண் அந்த ஆண்கணை நம்பியதுதான் அவர் செய்த தவறு. குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும்.

இஷா குப்தா


அம்த பெண்ணுக்கு வேண்டிய நீதி வழங்கப்பட வேண்டும். அமைதியாக இருக்கம் வேண்டாம். அவரது குடும்பத்திற்கு துணை நிற்போம்.

.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in