மனித உருவம் கொண்ட மோசமான சைத்தான்கள்: சல்மான் கான் கடும் சாடல்

மனித உருவம் கொண்ட மோசமான சைத்தான்கள்: சல்மான் கான் கடும் சாடல்
Updated on
1 min read

மனித உருவம் கொண்ட மோசமான சைத்தான்கள் என்று பிரியங்கா ரெட்டியைக் கொலை செய்தவர்களைக் கடுமையாகச் சாடியுள்ளார் சல்மான் கான்.

தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவர் பிரியங்கா ரெட்டி பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் இந்தியா முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து முகமது பாஷா, சிவா, நவீன் மற்றும் சென்ன கேசவுலு ஆகியோரைக் கைது செய்துள்ளது காவல்துறை.

பிரியாங்கா ரெட்டி மரணம் தொடர்பாக பல்வேறு திரையுலகப் பிரபலங்கள் தங்களுடைய கடும் கண்டனத்தைப் பதிவு செய்து வருகிறார்கள். இது தொடர்பாக இந்தி திரையுலகின் முன்னணி நாயகனான சல்மான் கான் தனது ட்விட்டர் பதிவில், ”இவை மனித உருவம் கொண்ட மோசமான சைத்தான்கள்.

நிர்பயா, பிரியங்கா போன்ற பெண்களின் வலியும், வேதனையும், மரணமும் நமக்கு மத்தியில் வாழும் இந்த சைத்தான்களுக்கு முடிவு கட்ட நம்மை ஒன்றிணைக்க வேண்டும். அவர்களின் குடும்பத்தினர் இந்த பெருந்துயரத்தையும் இழப்பையும் சந்திப்பதால் இது நிறுத்தப்பட வேண்டும்.

’மகள்களைக் காப்பாற்றுவோம்’ என்பது வெறும் பிரச்சாரமாக மட்டும் இருந்துவிடக்கூடாது. நாம் அனைவரும் ஒன்றாக நிற்கிறோம் என்பதை இந்தப் பேய்களுக்குத் தெரியப்படுத்த வேண்டிய நேரம் இது. பிரியங்காவின் ஆன்மா சாந்தி அடையட்டும்” என்று தெரிவித்துள்ளார் சல்மான் கான்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in