ஒரே சமயத்தில் 5 மொழிகளில் வெளியாகும் மைதான்

ஒரே சமயத்தில் 5 மொழிகளில் வெளியாகும் மைதான்
Updated on
1 min read

அஜய் தேவ்கான் நடிப்பில் உருவாகியுள்ள 'மைதான்' திரைப்படம் ஒரே நேரத்தில் 5 மொழிகளில் வெளியாகவுள்ளது.

அமித் ஷர்மா இயக்கத்தில் அஜய் தேவ்கன் நடிப்பில் உருவாகும் 'மைதான்' படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகிறார் கீர்த்தி சுரேஷ். போனி கபூர் தயாரித்து வரும் இந்தப் படம் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்படாமலேயே படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. தற்போது 2020-ம் ஆண்டு நவம்பர் 27-ம் தேதி 'மைதான்' வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.

இதனிடையே இந்தப் படத்தை இந்தியில் மட்டுமன்றி தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளிலும் ஒரே சமயத்தில் வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளது. இதற்கான காரணம் என்னவென்றால், 1950-லிருந்து 63 வரை, இந்தியக் கால்பந்து அணியின் மேனேஜராகவும், பயிற்சியாளராகவும் இருந்த சையத் அப்துல் ரஹீமின் பயணத்தைச் சொல்லும் படமே ’மைதான்’.

அவர் 1951 மற்றும் 1962 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய அணியை வெற்றிக்கு வழிநடத்திச் சென்றவர். இந்தியக் கால்பந்து அணியின் பொற்காலத்தில் பயிற்சியாளராக இருந்தவரைப் பற்றியும், ஆட்டத்துக்கு அவரது அற்புதமான பங்களிப்பைப் பற்றியும் மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்பதே இயக்குநர் அமித் சர்மாவின் நோக்கம். இதனாலேயே ஒரே சமயத்தில் 5 மொழிகளிலும் வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in