கபில் தேவ் கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங்: வைரலாகும் புகைப்படம்

கபில் தேவ் கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங்: வைரலாகும் புகைப்படம்
Updated on
1 min read

'83' படத்தில் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் ரன்வீர் சிங்கின் புகைப்படம் வைரலாகியுள்ளது. இதைப் பகிர்ந்துள்ள கபில் தேவும் ரன்வீரைப் பாராட்டியுள்ளார்.

1983-ம் வருடம் உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணியின் உண்மைக் கதையே '83' என்ற பெயரில் திரைப்படமாக உருவாகிறது. ‘பஜ்ரங்கி பைஜான்’, ’ஏக் தா டைகர்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய கபீர் கான் இந்தப் படத்தை இயக்குகிறார்.

இந்தப் படத்தில் நாயகனாக, இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் கபில் தேவ் கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங் நடிக்கிறார். கபில் தேவின் மனைவி ரோமி தேவ் கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங்கின் மனைவியான நடிகை தீபிகா படுகோன் நடிக்கிறார். தமிழ் நடிகர் ஜீவா, கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

திங்கட்கிழமை காலை, ரன்வீர் சிங் '83' புகைப்படத்தை வெளியிட்டார். கபில் தேவ் கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங் இருக்கும் புகைப்படம் இது. இதில் கபில் தேவின் தனித்துவமான, நடராஜர் ஷாட்டை ரன்வீர் ஆடுவது போல உள்ளது. இதைப் பகிர்ந்துள்ள கபில் தேவ், வாழ்த்துகள் ரன்வீர் என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த வருடம் ஏப்ரல் 10-ம் தேதி '83' திரைப்படம் வெளியாகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in