ஷாரூக் கான் பிறந்த நாள்: வாழ்த்து கூறிய மம்தா பானர்ஜி

ஷாரூக் கான் பிறந்த நாள்: வாழ்த்து கூறிய மம்தா பானர்ஜி
Updated on
1 min read

பாலிவுட் நடிகர் ஷாரூக் கானுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பனர்ஜி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் ரசிகர்களைக் கொண்டவர் பாலிவுட் நடிகர் ஷாரூக் கான். இவர் இன்று (சனிக்கிழமை) தனது 54-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இதனைத் தொடர்ந்து ட்விட்டரில் #HappyBirthdayShahRukhKhan என்ற ஹேஷ்டேக்கை அவரது ரசிகர்கள் இந்திய அளவில் ட்ரெண்ட் செய்தனர்.

மேலும் திரைப் பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் ஷாரூக் கான் பிறந்த நாளுக்கு தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். அந்த வகையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பனர்ஜி தனது வாழ்த்தைத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தன் ட்விட்டர் பக்கத்தில் மம்தா குறிப்பிடுகையில், “ பிறந்த நாள் வாழ்த்துகள் ஷாரூக் கான். என்னுடைய அழகான சகோதரர் நல்ல ஆரோக்கியத்தையும் வாழ்வில் வெற்றியையும் அடைய வாழ்த்துகள். மேற்கு வஙகத்தின் தூதராக நீங்கள் இருப்பதில் பெருமை கொள்கிறேன்.

உங்கள் படம் வாயிலாக எங்களை மகிழ்வியுங்கள். கொல்கத்தாவின் 25-வது சர்வதேச திரைப்பட விழாவில் உங்களைச் சந்திக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in