

பிரபு தேவா இயக்கத்தில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடிக்கும் ராதே படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.
’ராதே’படப்பிடிப்பு தொடங்கப்பட்டதை சல்மான் தனது ட்விட்டர் பக்கத்தில், ”பயணம் தொடங்கியது” என்று பட குழுவின் புகைப்படத்துடன் பதிவிட்டிருக்கிறார்.
அந்த புகைப்படத்தில் சல்மான் கானுடன் படத்தின் இயக்குனர் பிரபு தேவா, நாயகி தீஷா, ஜாக்கி ஷராப் ஆகியோர் இடப்பெற்றுள்ளன.
ராதே படத்தில் சல்மான் போலீஸ் வேடத்தில் நடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சல்மான் போலீஸ் வேடத்தில் நடித்துள்ள ’தபங் 3’ திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.
ராதே திரைப்படம் அடுத்த அடுத்த ஆண்டு பக்ரீத் பண்டிகையன்று திரைக்கு வரவுள்ளது. பிரபு தேவா இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு வாண்டட் (போக்கிரி படத்தின் ரீமெக்) திரைப்படத்தில் சல்மான் கான் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.